ஒன்பது மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று 7 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் இன்று ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
31.10.2021 முதல் 02.11.2021 வரை, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் 30.10.2021 மற்றும் 31.10.2021 ஆகிய நாட்களில் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி கூடிய பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுள்ளார்கள்.







