பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாளையொட்டி மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது தேவர் ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்டோபர் 28 தேதி தொடங்கி 30ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இந்தநிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
https://twitter.com/CMOTamilnadu/status/1454294593122422786
இதன் தொடர்ச்சியாக, தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்து மரியாதை செலுத்தினர்.







