#SchoolLeave | கனமழை எதிரொலி… எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக தென்காசி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முதல் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில்…

#SchoolLeave | In which districts are holidays for schools and colleges today?

கனமழை காரணமாக தென்காசி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முதல் லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதேபோல், தெற்கு அந்தமான் கடல் பகுதியின் மேல் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுட்டது.

இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் எனவும் இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதற்கிடையே திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்…

பள்ளி, கல்லூரிகள்

தென்காசி

திருநெல்வெலி

தூத்துக்குடி

பள்ளிகள் மட்டும்

விழுப்புரம்

தேனி

திருச்சி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.