மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ஹபீப் முகம்மது. இவர் பள்ளி…

முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ஹபீப் முகம்மது. இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி, மாவட்ட ஆட்சியர் சந்திராகலாவுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து பிறப்பிக்கப்ட்ட உத்தரவை அடுத்து அவரை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.