யோகா செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பள்ளி மாணவர்கள் ..!

விருதுநகரில், 9 வது சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்கள், 1 மணி நேரத்தில் 108 முறை சூரிய நமஸ்காரம் யோகா செய்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.…

விருதுநகரில், 9 வது சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு 200
பள்ளி மாணவர்கள், 1 மணி நேரத்தில் 108 முறை சூரிய நமஸ்காரம் யோகா
செய்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் சர்வதே யோகாதினம் ‘ஜூன் 21’ம் தேதி கடைபிடிக்கப்பட்டு
வருகிறது. அதனை முன்னிட்டு, இன்று விருதுநகரில் உள்ள ஸ்ரீவித்யா பள்ளி
கலை அரங்கத்தில், 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, விருதுநகர்
யோகா அசோசியேசன் செயலாளர் ரேணு ராம்பால் அவர்கள் தலைமையில்,
யோகா நடைபெற்றது.

இதில் விருதுநகரில் உள்ள 5 பள்ளியிலிருந்து, 3ம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு
வரை பயிலும் பள்ளி மாணவர்கள் 200 பேர் 1 மணி நேரத்தில், தொடர்ந்து 108
முறை சூரிய நமஸ்காரம் யோகா செய்து,  உலக சாதனை புத்தகத்தில்
இடம்பிடித்தனர். உலக சாதனை பார்வையாளர் கதிரவன் முன்னிலையில்,
இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள தனியார்
பள்ளி மாணவர்கள், 50 பேர் 1 மணிநேரம் 40 நிமிடத்தில் 108 முறை சூரிய
நமஸ்காரம் யோகா செய்து,உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது
குறிப்பிடத்தக்கது.

கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.