உணவகத்தில் கூடுதல் சேர்வா தர மறுத்ததால் அடிதடி..!!

கூடுதல் சேர்வா கேட்டு தர மறுத்த    அசைவ உணவக பணியாளர்களை தாக்கி அசைவ உணவகத்தை அடித்து உடைத்த மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். காஞ்சிபுரம்…

கூடுதல் சேர்வா கேட்டு தர மறுத்த    அசைவ உணவக பணியாளர்களை தாக்கி அசைவ உணவகத்தை அடித்து உடைத்த மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காஞ்சிபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே காந்தி சாலை பகுதியில் அசைவ உணவகம்
செயல்பட்டு வருகிறது.  அசைவ உணவகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பரோட்டா, சேர்வா, கேட்டுள்ளனர். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கூடுதலாக சேர்வா வழங்குமாறு  உணவக பணியாளர்களிடம் கேட்டுள்ளனர்.

ஆனால், உணவக பணியாளர்கள் தேவையான அளவிற்கு மட்டுமே வழங்க முடியும் கூடுதலாக வழங்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உணவக சமையலறையில் நுழைந்து ஊழியர்களை தாக்கினர். தொடர்ந்து உணவகத்தில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

இச்சம்பவத்தில் உணவகத்தை சேர்ந்த  பணியாளர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.  இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சி போலீஸார் விஷ்ணு விசாரணை
மேற்கொண்டார். மேலும் சிசிடிவி காட்சிகளை பற்றி அடிதடி தகராறில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டனர். பின்பு உணவக பணியாளர்களை காயப்படுத்தி தப்பி ஓடிய மர்ம நபர்கள் 5 பேரை போலீஸார்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ம. ஶ்ரீ மரகதம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.