முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நடிகை அளித்த பாலியல் புகாரில், முன்ஜாமீன் கோரி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த துணை நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தம்மை திருமணம்…

நடிகை அளித்த பாலியல் புகாரில், முன்ஜாமீன் கோரி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த துணை நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தம்மை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, குடும்பம் நடத்திவிட்டு, திருமணம் செய்ய மறுப்பதாகவும், பல முறை தன்னை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தற்போது தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கில் தமக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி, உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுதாக்கல் செய்தார்.

அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என நடிகை சாந்தினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நீதிபதி குத்தூஸ் முன்னிலையில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.