34.5 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள் Fact Check Stories

10ம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம், வாஜ்பாய் பெயரில் கல்வி உதவித் தொகையா? – உண்மை என்ன?

This News Fact Checked by  Newsmeter

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி பரவியது. அதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது அது குறித்து விரிவாக காணலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம், வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா?

சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. அது என்னவெனில் “அனைவருக்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் scholarship ஒன்றை அறிவித்துள்ளார். 75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ₹10000/_ ரூபாயும், 85% மேல் மதிப்பெண் பெறும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ₹25000/_ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவும். –

இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே. உயர் நீதிமன்ற உத்தரவு எண்: WP (MD) NO.20559/2015” என்ற தகவலுடன் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் இந்த தகவல் வைரலாக பரவியது.

வைரலாகும் தகவல் – உண்மை என்ன?

இத்தகவல் உண்மை தானா என்பதை கண்டறிய இதுகுறித்து மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இவ்வாறான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறதா என்று  நியூஸ் மீட்டர் உண்மை சரிபார்ப்பு செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.  அப்போது, அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த ஒரு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

https://x.com/PIBFactCheck/status/1228342131145814018

மேலும், ” 10ம் வகுப்பில்  75% மற்றும் 12ஆம் வகுப்பில் 85% மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 10,000 மற்றும் ரூ. 25,000 உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் என்ற தகவலை சமூக வலைதளங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவறான தகவல் என்றும் கூறியுள்ளதாக”  The Hindu ஊடகம் கடந்த மே 16ஆம் செய்தி வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த தகவலின் உண்மைத் தன்மையை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இது தொடர்பாக PIB Fact Check எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் 10 அல்லது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. எனவே, இவ்வாறாக வைரலாகும் செய்தி தவறானது” என்று கூறப்பட்டுள்ளது.

முடிவு : 

எனவே நியூஸ் மீட்டரின் ஆய்வு முடிகளின்படி  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாயின் பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக வைரலாகும் தகவல் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

This story was originally published by ‘Newsmeter’ and republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading