மீன்பிடி தடை கால எதிரொலி – சென்னையில் மீன்களின் விலை இரு மடங்கு உயர்வு..!

மீன்பிடி தடை காலத்தின் எதிரொலியாக சென்னையில் மீன்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது.  மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வருடா வருடம் மீன் பிடி தடை காலம் விதிக்கப்படுவது வழக்கம்.  இந்த வருடத்திற்கு கடந்த ஏப்ரல் 15-ம்…

மீன்பிடி தடை காலத்தின் எதிரொலியாக சென்னையில் மீன்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. 

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வருடா வருடம் மீன் பிடி தடை காலம் விதிக்கப்படுவது வழக்கம்.  இந்த வருடத்திற்கு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளது.  இதன் எதிரொலியாக மீன்களின் வரத்து குறைந்துள்ளதால்,  அதன் விலை அதிகரித்துள்ளது.

அந்த வகையில் சென்னை பட்டினம் பாக்கம் கடற்கரை ஓரம் விற்கப்படும் மீன்களின் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது.  நேற்றை விட இன்று ஒவ்வொரு மீன்களுக்கும் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.  விடுமுறை நாளையொட்டி சென்னையில் பல்வேறு பகுதியில் இருந்து பட்டினம்பாக்கம் கடற்கரையில் மீன் வாங்க பொதுமக்கள் இன்று வந்த வண்ணமாக இருந்தனர்.

மீன்களின் விலை பட்டியல்

  • இறால் மீன் 600 ரூபாய்
  • வஞ்சிரம் மீன் 1200 ரூபாய்
  • வவ்வால் மீன் 800 ரூபாய்
  • கலியாண் மீன் 600 ரூபாய்
  • கெண்டை மீன் 100 ரூபாய்

அதேபோல் நேற்று பத்து நண்டு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று எட்டு நண்டு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  மீன்பிடி தடை காலம் முடிந்த பிறகு வஞ்சரம் மீன் 200 ரூபாய் குறைந்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் நண்டு, இரால் மற்றும் மற்ற மீன்களின் விலையும் குறையும் என மீனவர்கள் கூறுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.