ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( எஸ்.பி.ஐ ) தனது ஏடிஎம்கள் மற்றும் வங்கிக் கிளைகள் ஆகியவற்றிலிருந்து பணம் எடுப்பதற்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஜூலை 1முதல் செயல்படுத்தப்படும் என வங்கி கூறியுள்ளது. மேலும், இந்த புதிய விதிமுறைகள் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு ( Basic Savings Bank Deposit (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
எஸ்.பி.ஐ ஏடிஎம் மற்றும் வாங்கிக் கிளையிலில் இருந்து நான்கு முறைக்கு மேல் பணம் எடுப்போருக்கு ஜூலை 1 முதல் சேவைக் கட்டணம் பிடிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்களில் நான்கு இலவச பரிவர்த்தனைக்கு பிறகு ரூ .15 மற்றும் ஜிஎஸ்டியோடு சேவை கட்டணம் கட்டணம் பிடிக்கப்படும் என்ற புதிய அரிப்பினை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. எஸ்பிஐ அல்லாத வங்கி ஏடிஎம்களுக்கும் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி சேவை கட்டணமே வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. எஸ்பிஐ கிளைகளில், ஒரே மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணத்தை எடுக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், 5வது பரிவர்த்தனை முதல் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், 10 பக்கங்கள் கொண்ட காசோலை புத்தகத்தை பெற ரூ .40 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்றும், 25 பக்கங்கள் கொண்ட காசோலை புத்தகம் தேவைப்பட்டால், ரூ .75 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்றும் எஸ்.பி.ஐ குறிப்பிட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு, காசோலை புத்தகத்திற்கான புதிய சேவை கட்டண விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.