பாரத ஸ்டேட் வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு பொங்கல் திருநாளான இன்று நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தேர்வில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பொங்கல் தினமான இன்று பாரத ஸ்டேட் வங்கியின் கிளர்க் முதன்மை தேர்வு நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் இன்று எஸ்பிஐ தேர்வு நடத்தப்படுவதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் எஸ்பிஐ தேர்வு தேதி மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் வராத நிலையில், கிளர்க் முதன்மை தேர்வு இன்று நடைபெற்றது.
இந்நிலையில், எஸ்பிஐ கிளர்க் முதன்மைத் தேர்வில் ஏராளமான தேர்வர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். மணப்பென் ஒருவர் தேர்வெழுத வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.