முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

செளதி அரேபியாவில் 2020 ஆண்டில் 27 பேருக்கு மட்டுமே தூக்கு தண்டனை; மனித உரிமைகள் அமைப்பு தகவல்!

செளதி அரேபியாவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2020 ஆம் ஆண்டில் 23 பேருக்கு மட்டுமே தூக்குதண்டை வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் கொடுமையான தண்டனை சட்டங்கள் உள்ள நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக செளதி அரேபியாவில் கடுமையான தண்டனை சட்டங்கள் உள்ளது. எல்லா வருடமும் அதிகமான தூக்கு தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் செளதி அரேபியாவும் முக்கியமான இடம் வகிக்கிறது. இங்கு சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இருப்பினும் செளதியில் இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் அங்கு சட்டங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் செளதி அரேபியாவில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு செளதி அரேபியாவில் கடந்த ஆண்டு 27 பேருக்கு மட்டுமே தூக்குதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 85% குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தூக்குதண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவுக்கு கொரோனா பரவல் ஒரு காரணம் என்றாலும் அங்கு சில குற்றங்களுக்கு தண்டனை அளவு குறைக்கப்பட்டுள்ளதும் ஒரு காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மத்திய அரசு தெற்கு ரயில்வேவுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? – எம்பி கனிமொழி

Arivazhagan Chinnasamy

ஹெட்செட் பயன்படுத்துவதால் 100 கோடி இளைஞர்களுக்கு காது கேளாமை அபாயம் – அதிர்ச்சி தகவல்

NAMBIRAJAN

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை கலைக்கப் போவதில்லை: தமிழ்நாடு அரசு

EZHILARASAN D

Leave a Reply