53 கார் வகைகளை சரியாக கூறி 9 வயது சிறுவன் சாதனை!

உயர் ரக 53 கார்களின் வகைகள் மற்றும் அதன் நிறுவனர் பெயரை ஒரு நிமிடத்தில் கூறி 9 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். சென்னை பெரவள்ளுர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் சதக்கத்துல்லா- ஷர்மிளா…

உயர் ரக 53 கார்களின் வகைகள் மற்றும் அதன் நிறுவனர் பெயரை ஒரு நிமிடத்தில் கூறி 9 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

சென்னை பெரவள்ளுர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் சதக்கத்துல்லா- ஷர்மிளா தம்பதியினர். இவர்களுக்கு 4 ம் வகுப்பு படிக்கும் முகமது ஹர்ஷத் என்ற மகனும், 1 ம் வகுப்பு படிக்கும் நஸ்ரியா என்ற மகளும் உள்ளனர். சிறுவன் ஹர்ஷித்திற்கு சிறுவயது முதலே கார் மீது மோகம் அதிகம். அதனால் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் கார் வகைகளை பார்த்து ரசித்து வந்துள்ளார்.

இவரின் ஆர்வத்தைக் கண்ட அவரது பெற்றோர் உலகில் உள்ள கார்களின் வகைகள் மற்றும் அதன் நிறுவனர், குறித்து கற்பித்து வந்துள்ளனர். அதை ஆர்வத்துடன் கேட்டு படித்து வந்துள்ளார் சிறுவன். இந்நிலையில் பெற்றோர் கார் குறித்து கேட்கும் போதெல்லாம் எதையும் பார்க்காமல் சரியான பதிலை கூறுவதை பார்த்து வியப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆலோசனைப்படி, சிறுவனின் திறன் குறித்து அந்நிறுவனம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரு நிமிடத்தில் 53 கார் வகைகள், நிறுவனர் குறித்து சரியாக கூறி சிறுவன் சாதனை படைத்துள்ளார். அவரது திறனைப் பாராட்டி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply