முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 246 பேர் கொரோனாவுக்கு பலி

இந்தியாவில், புதிதாக 18,987 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றன. சில நாட்களாக, 18 ஆயிரத்தை தாண்டி இருந்த தொற்று 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ,18,987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு 3,40,20,730 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில், 19,808 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 62 ஆயிரத்து 709 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 246 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,51,435 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 96,82,20,997 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 35,66,347 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை!

ஆ.ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: கேபி.முனுசாமி!

Halley karthi

மொத்த ஆட்டத்தையும் மாத்திட்டார் ருதுராஜ்: பொல்லார்ட்

Ezhilarasan