சட்டைநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம்: பக்தர்கள் உற்சாக வழிபாடு!

சீர்காழி முத்து சட்டை நாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடை பெற்றது. மயிலாடுதுறை, சீர்காழி தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மே…

சீர்காழி முத்து சட்டை நாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் செய்து சிறப்பு
வழிபாடு நடை பெற்றது.

மயிலாடுதுறை, சீர்காழி தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா மூன்று நாட்கள் தொடங்கி நடை பெற்று வருகிறது.

இதன் நிறைவு நாளான நேற்று, முத்து சட்டை நாத சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சுவாமிக்கு பஞ்ச முக அர்ச்சனையும், அம்மனுக்கு நவசக்தி அர்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து முத்து சட்டை நாதர் சுவாமிக்கு இரண்டு கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று, தீபாராதனை நடை பெற்றன.

பின்னர் எதாஸ்தானத்தில் இருந்து முத்து சட்டை நாதர் சுவாமி உற்சவம் மண்டபம் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு 51 வகையான நறுமண திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், புனித நீர் அடங்கிய 108 கலசாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பட்டு வஸ்திரம், மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் தர்மபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் பங்கேற்று தரிசனம் செய்தார். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.

ஸ்ரீ.மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.