தனியார் மருத்துவமனைகளில் 50 சதவிகித படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கவேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
இதனையடுத்து, தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு உதவும் வகையில், 50 சதவிகித படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் எனவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தினமும் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இணையதளத்திலும் தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







