முக்கியச் செய்திகள் தமிழகம்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பி.எஸ்.என்.எல் அதிகாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர், ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து தந்தை – மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது நேற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது.

அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.

வழக்கில் சாட்சிய விசாரணை தொடங்கியபோது B.S.N.L., அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்கள் கூறுகையில், சாத்தான்குளத்தில் தந்தை, மகனை காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தியபொழுது, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சாத்தான்குளத்தில் தான் இருந்தனர் என்பதற்கான சாட்சியங்களை அளித்து, ஆவணங்களைத் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகர் சிவாஜியின் மகள்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

EZHILARASAN D

நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

Web Editor

குமரியில் தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு-2 பேரை தேடி கேரளா விரைந்த தனிப்படை

G SaravanaKumar