சாத்தான்குளம் வழக்கு 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பல் மருத்துவர் சாட்சி  அளித்தார். இதுதொடர்பான வழக்கை 19 ஆம் தேதிக்கு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை…

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பல் மருத்துவர் சாட்சி  அளித்தார். இதுதொடர்பான வழக்கை 19 ஆம் தேதிக்கு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் விசாரணையின்போது காவல் துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த போது ஜெயராஜ் பென்னிக்ஸ் கடைக்கு அருகில் பல் மருத்துவமனை நடத்தும் பல் மருத்துவர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.