சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்தனர். இந்நிலையில் சசிகலாவை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை திமுக அரசு நிறுத்தினால் மக்களை திரட்டி போராடுவோம் என கூறினார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்ததாகவும், அதிமுகவில் தொண்டர் முதல் தலைவர் வரை அரசியல் நாகரீகத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். அரசியலிலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அதை ஏற்றுக்கொள்வது மக்களின் முடிவு என கூறிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில், சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதை நினைவூட்டியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.