பிப் 7ம் தேதி சென்னை வருகிறார் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிவடைந்து கொரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் தனிமைப்படுத்திக் கொண்ட சசிகலா, வரும் 7ம் தேதி சென்னை வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிவடைந்து கொரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் தனிமைப்படுத்திக் கொண்ட சசிகலா, வரும் 7ம் தேதி சென்னை வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டதை அடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்தார். தண்டனை காலம் முடிவடைய சில நாட்கள் இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் கடந்த ஜனவரி 27ஆம் தேதி முறைப்படி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். கொரோனா சிகிச்சையில் இருந்து குணம் அடைந்த சசிகலா, கடந்த மாதம் 31 ஆம் தேதி விக்டோரிய மருத்துவமனையில் இருந்து பெங்களூரில் உள்ள உறவினரின் இல்லத்தில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். வரும் 6ஆம் தேதியுடன் தனிப்படுத்தும் காலம் முடிவடைவதை அடுத்து, வரும் ஏழாம் தேதி சாலை மார்க்கமாக சசிகலா சென்னை வருகிறார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா சென்னை வரும் தகவலை உறுதி செய்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அதிமுகவில் உள்ள பலர் தூங்குவது போன்று நடிப்பதாக கூறினார். அதிமுக பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் அதன் பொதுச்செயலாளரான சசிகலாவுக்குத்தான் உண்டு என்று டிடிவி தினகரன் உறுதிபடக் கூறினார். கட்சியில் பதவி கொடுப்பதற்கும் பதவியில் இருந்து நீக்குவதற்கும் அதிகாரம் உள்ளவர் பொதுச்செயலாளரான சசிகலாதான் என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்வரை பொறுத்திருப்போம் என்றும் அவர் வலியுறுத்தினார். அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்டப் போராட்டத்தை சசிகலா மேற்கொள்வார் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply