நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் இருசக்கர வாகன மூலம் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து மாத விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை தன்னார்வ அமைப்பினர் இணைந்து 32வது சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தினர். இதில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பேரணியானது குளத்து காட்டில் தொடங்கி சேலம் சாலை மற்றும், பள்ளிபாளையம் பிரிவு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று நகராட்சியில் நிறைவு பெற்றது. பேரணியின்போது தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலைக்கவசம் அணிந்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக நடைபெற்ற பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.