ஏறத்தாழ 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடம் வருகிறார் வி.கே.சசிகலா
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று சசிகலா செல்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசி வந்தார். இதனால் அவர் தீவிர அரசியலில் ஈடுபடபோகிறார் என கணிப்புகள் வெளிவந்தன. ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அவர் அமமுக சார்பாக பரப்புரை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை.
இந்நிலையில், ஏறத்தாழ 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா. அவருடைய வருகையை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்படடுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின் நினைவிடம் வரும் சசிகலாவை வரவேற்க ஆதரவாளர்கள் மெரினாவில் குவிந்துள்ளனர். இன்று காலை 10.30 மணிக்கு தி.நகர் இல்லத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் நினைவிடம் நோக்கி புறப்படும் சசிகலா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.
நினைவிடத்தில் கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement: