முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்செந்தூர் கோவிலுக்கு காணிக்கை வழங்கிய சசிகலா

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு 5 அடி உயர வெண்கல வேலை காணிக்கையாக வழங்கி தரிசனம் செய்தார் வி.கே.சசிகலா.

வி.கே. சசிகலா கடந்த மார்ச், 21-ஆம் தேதி தனது முதற்கட்ட ஆன்மீகப் பயணத்தை தஞ்சையில் துவங்கி, திருச்சியில் முடித்தார். அதனைத்தொடர்ந்து, ஏப்ரல்.11-ஆம் தேதி தனது, இரண்டாம் கட்ட ஆன்மிக சுற்றுப் பயணத்தை திருச்சியில் துவங்கினார். திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் துவங்கி, முசிறி அருகே திருவாசி மாற்றுரைதீஸ்வரர் கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயில்களில் ஸ்வாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்த கையோடு, எடப்பாடி, சேலம் ராஜகணபதி கோயிலில் ஆன்மீக சுற்றுப் பயணத்தை நிறைவுச் செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘முதலமைச்சர் பெயர் தமிழ்நாட்டு வரலாற்றில் துருவ நட்சத்திரமாக திகழும் – தி.மு.க பொதுச் செயலாளர், துரைமுருகன்’

ஏப்ரல், 26-ஆம் தேதி, 3-ஆம் கட்ட ஆன்மீகப் பயணத்தை துவங்கிய அவர், திருச்சியில் இருந்து கார் மூலம், நாகை மாவட்டம் திருக்கடையூர் சென்ற சசிகலா, அமிர்தகடேசுவரர் அபிராமியம்மன் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார். அடுத்ததாக, சிங்காரவேலன் கோயிலில் சசிகலா ஸ்வாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, வேளாங்கண்ணி மாதா தேவாலயம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு வழிபாடுகள் செய்து, தனது ஆன்மிகப் பயணத்தை நிறைவுச் செய்தார்.

இந்நிலையில், தென்மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீக சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா, இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்ற அவர், அதிகாலை நடைபெற்ற விஸ்வரூப தீபாராதணையில் கலந்துகொண்டு 5-அடி உயர வெண்கல வேலினை கோவிலிலுக்கு காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போர்க்குற்ற விசாரணை; ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Saravana Kumar

எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் : மு.க.ஸ்டாலின்

Ezhilarasan

சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பி வைப்பு

Gayathri Venkatesan