இனத்தைக் காப்பது, மொழியைக் காப்பது இன்னபிற திராவிடக் கலைகளைக் காப்பது திராவிட மாடல் ஆட்சியின் தன்மைகளில் ஒன்று என தி.மு.க பொதுச் செயலாளர், துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மக்களின் உயிரைக் காப்பது, உடைமையைக் காப்பதோடு இனத்தையும் காத்து விட்டால், எதிர்காலத்தில் எவரும் ஏகதேச ஞான மாயையில் சிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ள அவர், திராவிடனே, தமிழனே தமிழ்நாட்டை ஆளும் திறன் பெற்றவனாகத் திகழ இந்த திராவிட மாடல் ஆட்சி முறை, ஒரு அஸ்திவாரத்தை அமைக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், வல்லாட்சியிலிருந்து மக்களை மீட்டு நல்லாட்சி காண வைப்பது மட்டுமல்ல திராவிட மாடல் ஆட்சி முறை, நல்லாட்சியை அமைத்துக் கொள்கிற நிலைக்கு மக்களை உருவாக்குவதே திராவிட மாடல் ஆட்சி முறை என தெரிவித்துள்ள அவர், திராவிட இயக்க வரலாற்றில், முதன் முதலாக ஆட்சிக்கு என்று ஒரு முறையை, அதுவும் ‘திராவிட மாடல் ஆட்சி முறை’ என்று ஒன்றை உருவாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் தமிழ்நாடு வரலாற்றில் துருவ நட்சத்திரமாக என்றும் திகழும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக, ‘இது மக்களின் அரசு; மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு; மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகின்ற அரசு. நூறாண்டு கால ‘திராவிட மாடல்’ வளர்ச்சியை ஓராண்டு காலத்தில் மீட்டெடுத்து, இலட்சியப் பாதையில் தலைநிமிர்ந்து பயணிக்கின்ற தமிழ் அரசு!’ என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்திருந்தார். அதில், இந்தியாவில் நம்பர் 1 முதல்வர் என்பதை விட இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்பதே உண்மையான பெருமை தரக்கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.