முக்கியச் செய்திகள் தமிழகம்

2026ல் பாமக ஆட்சியை கைப்பற்றும்: அன்புமணி

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுக்கும் என்எல்சிக்கு பூட்டு
போடும் போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் கடலூர்
தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டார்.

அன்புமணி பேசும்போது, “பாமக 2.0 என கட்சியை மறுசீரமைப்பு செய்து வருகிறோம், வருகிற 2026-ம் ஆண்டு பாமக ஆட்சியை பிடிக்கும். முதலமைச்சராவது எண்ணமில்லை, தமிழ்நாட்டை முன்னேற்றுவதே இலக்கு. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுக்கும் என்எல்சிக்கு விரைவில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி அதை சட்டமாக கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஓராண்டு காலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை அமைச்சரையும் பாராட்டுகிறேன் என்ற அன்புமணி, “பள்ளி மாணவிகள், மது அருந்துவதுதான் திராவிட மாடலா? தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்”என்றார்.

Advertisement:
SHARE

Related posts

ஆன்மீக ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமை, அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து!

Saravana

ட்விட்டர் ஸ்பேசஸ் மூலமாக நடத்தப்படும் சினிமா நிகழ்ச்சிகளால் சினிமா பிரபலங்களுக்கு சாதகமா? பாதகமா?

Vandhana

மதுரையில் 12டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Halley Karthik