சசிகலா நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து உடல்நலம் குறித்து அவ்வப்போது…

சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து உடல்நலம் குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். கடந்த 5 நாட்களாக செயற்கை சுவாசம் இல்லாமல் சசிகலா இயல்பாக சுவாசிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் மற்றும் சர்க்கரை அளவு சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சசிகலா நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா ஜனவரி 27ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் பெங்களூருவில் தங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply