வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்திவைக்க பிரதமர் உறுதி என தகவல்!

வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் வரை நிறுத்திவைக்க தயார் என அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக 50 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள்…

வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் வரை நிறுத்திவைக்க தயார் என அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 50 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசு-விவசாய சங்கங்கள் இடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. கடந்த 22ஆம் தேதி பேட்டியளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் வரை நிறுத்திவைக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, விவசாயிகள் பிரச்சினை குறித்து மத்திய அரசு திறந்தமனதோடு அணுக இருப்பதாக பிரதமர் கூறினார்.

ஜனவரி 22ஆம் தேதி வேளாண் துறை அமைச்சர் முன்மொழிந்ததுதான் இப்போதும் மத்திய அரசின் நிலைப்பாடு என்ற அவர், வேளாண் அமைச்சருக்கு போனில் ஒரு அழைப்பு விடுத்தால் போதும், பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். இதனை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோதி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 22ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின் போது நரேந்திர சிங் தோமர், 1 முதல் ஒன்றரை வருடங்கள் வரை வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply