மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் நிராகரிக்கப்பட்டது குறித்து, தேர்வு குழுவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரஹானே (VC), கேஎஸ் பாரத் (WK), இஷான் கிஷன் (WK).), அஷ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பட்டியலில் சர்பராஸ் கானுக்கு இந்திய அணியின் தேர்வு குழு வாய்ப்பளிக்கவில்லை.இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஐபில் போட்டிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே டெஸ்ட் அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றால், ரஞ்சி டிராபி போட்டியை தொடர வேண்டிய அவசியம் இல்லையே என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சர்பராஸ் கான் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டிய நேரம் இது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
“சர்பராஸ் கான் கடந்த மூன்று சீசன்களிலும் சராசரியாக 100 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அணியில் இடம் பெற என்ன செய்ய வேண்டும்? அவர் ஆடும் XI இல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் அவரை அணியில் தேர்வு செய்யுங்கள்.”
“அவரது செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படுகின்றன என்று அவரிடம் சொல்லுங்கள். என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.
2022-23 ரஞ்சி டிராபியில் மூன்று சதங்கள் உட்பட 92.66 சராசரியுடன் ஆறு ஆட்டங்களில் சர்பராஸ் 556 ரன்கள் குவித்துள்ளார். வலது கை பேட்டரான இவர், 2021-22 ரஞ்சி சீசனில் 122.75 சராசரியில் 982 ரன்கள் எடுத்திருந்தார். சர்ஃபராஸ் கான் இதுவரை 37 முதல் தர போட்டிகளில் 13 சதங்கள் உட்பட 79.65 சராசரியுடன் 3505 ரன்கள் எடுத்துள்ளார்.