இந்தியாவின் சுவையான இட்லி : மலரும் நினைவுகளை பகிர்ந்த அமெரிக்க துணை அதிபர்

இந்தியாவில் மேற்கொண்ட அரசு முறை பயணத்தின் போது அங்கு சுவையான இட்லி பரிமாறப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர்…

இந்தியாவில் மேற்கொண்ட அரசு முறை பயணத்தின் போது அங்கு சுவையான இட்லி பரிமாறப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதனிடையே மோடிக்கு அளித்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் பேசினார். அப்போது, பிரதமர் மோடி 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா உலகளாவிய தலைவராக உருவெடுக்க உதவுவதில் உங்கள் பங்கு மற்றும் தலைமைக்கு நன்றி. நான் அமெரிக்க துணை அதிபராக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன்.

அப்போது இந்தியாவின் உலகளாவி தாக்கத்தை கண்டேன். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பல உயிர்களை காப்பாற்றுகின்றன. ஆப்பிரிக்க கண்டத்தில், இந்தியாவின் நீண்டகால கூட்டாண்மை வளம் மற்றும் பாதுகாப்பை ஆதரிக்கிறது.

இந்தோ-பசிபிக் தொடர்பு மூலம், இந்தியா சுதந்திரமான மற்றும் திறந்த பிராந்தியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்தியாவில் விடுமுறை நாட்களை கழித்ததை மறக்க முடியாது. இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்ட போது அங்கு சுவையான மெருதுவான் இட்லி பரிமாறப்பட்டது. அதன் சுவையை என்றும் மறக்க முடியாது ” என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.