குருகிராமில் 4 BHK வீட்டிற்கு உரிமையாளராகும் சானியா மல்ஹோத்ரா!

பிரபல ஹிந்தி நடிகை சானியா மல்ஹோத்ரா தன் ‘கதல்’ படம் வெளியாகவிருக்கும் நிலையில் 4  படுக்கையறைகள் கொண்ட வீட்டை தனக்காகவும், தன் குடும்பத்திற்க்காகவும் குருகிராமில் வாங்கியுள்ளார். நடிகை சானியா மல்ஹோத்ரா இந்தி படங்களில் நடித்து…

பிரபல ஹிந்தி நடிகை சானியா மல்ஹோத்ரா தன் ‘கதல்’ படம் வெளியாகவிருக்கும் நிலையில் 4  படுக்கையறைகள் கொண்ட வீட்டை தனக்காகவும், தன் குடும்பத்திற்க்காகவும் குருகிராமில் வாங்கியுள்ளார்.

நடிகை சானியா மல்ஹோத்ரா இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் 2016-ல்  வெளியான வரலாற்று விளையாட்டு படமான தங்கல் மற்றும் 2018-ம் ஆண்டு நகைச்சுவை திரைப்படம் படாய் ஹோ ஆகியவற்றில் துணை வேடங்களில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இவை இரண்டும் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் இடம் பெற்றுள்ளன. மேலும் 2019-ம் நடைபெற்ற பிலிம்பேர் கிரிட்டிக்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சானியா போட்டோகிராப் திரைப்படத்திற்காக பெற்றார். மேலும் 2020-ல் வெளியான சகுந்தலா தேவி, 2021 -ல் வெளியான பகாலிட் மற்றும் 2022-ல் வெளியான ஹாஸ்டல் ஆகிய  படங்களில் நடித்ததற்காக பெரும் பாராட்டுகளைப் பெற்றார். தனது திரைப்பயணத்தின் குறுகிய காலத்தில், சானியா மல்ஹோத்ரா தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார்.

நடிகை சானியா இப்போது தனது கதல் பட வெளியீட்டிற்க்காக காத்துக் கொண்டுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, அவர் குருகிராமில் 4 படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டை வாங்கியுள்ளார். தனது பரபரப்பான நடிப்பு வாழ்க்கையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு தனது நேரத்தை செலவிடப்போவதாக நடிகை சானியா கூறியுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், சானியா தனது கிரகபிரவேச விழாவின் காட்சிகளை இன்ஸ்டாகிராம் கதைகளில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், அவர் தனது புதிய வீட்டிற்குள் நுழைவதையும் அந்த பதிவில் “புதிய வீடு” என்றும் பதிவிட்டுள்ளார். பூஜையில் இருந்து சில புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பதிவிட்டுள்ளார்.

கதல் படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகை சானியா  நடித்துள்ளார். இத் திரைப்படம் வருகின்ற 19-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.