சாயக்கழிவுகளால் நுரை பொங்க வரும் நொய்யல் – விவசாயிகள் வேதனை!

சாய ஆலைகளின் ரசாயன கழிவுகளால் நொய்யல் ஆறு நுரை பொங்க வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாய…

சாய ஆலைகளின் ரசாயன கழிவுகளால் நொய்யல் ஆறு நுரை பொங்க வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள சென்னிமலை அருகே
ஒரத்துப்பாளையத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாய நிலங்கள் பாசனம் பெறும் வகையில் அணை கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வந்தாலும் மாலை நேரத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆறு மூலமாக ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறும் நீர் நுரையுடன் காணப்படுகிறது. அணையில் இருந்து வெளியேறும் நீர் கலங்கிய நீராக நுரையுடன் வெளியேற்றப்பட்டு வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.