மேகதாது: டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தண்ணீர் வரத்து குறைந்துவிடும்…

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தண்ணீர் வரத்து குறைந்துவிடும் எனவும் தமிழ்நாடு அரசு குறிப்பிடுகிறது.

ஆனால், மேகதாது அணை கட்டுவதில் 100 சதவிகிதம் உறுதியாக உள்ளோம் எனவும், அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனிடையே மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் வலியுறுத்த தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் டெல்லி சென்றனர். அணை கட்ட அனுமதி கோரி பிரதமரை சந்திக்க கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார்.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். மேகதாது பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.