முக்கியச் செய்திகள் இந்தியா

இலங்கை பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்க?

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மக்களுக்கு நேற்று உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கையில் ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை பொறுப்பேற்கும் என்றும் கூறினார். அப்போது, புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக கடந்த சில நாட்களில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் 19-வது சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.

அண்மைச் செய்தி: ‘கமல் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி’

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவேன் எனவும் உறுதி அளித்தார். இதற்கிடையே இலங்கை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் எனவும் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இப்படியான தகவல் வெளியாகி இருப்பது இலங்கை அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!

Jayapriya

“திமுக சாதி, மத பாகுபாடுகளை எப்போதும் ஏற்றுக்கொள்ளாது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Jeba Arul Robinson

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Arivazhagan CM