முக்கியச் செய்திகள் செய்திகள்

ராஜஸ்தான் அணிக்கு செக்: பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் டெல்லி!

டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது டெல்லி.

ஐபிஎல். இல் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இனிவரக்கூடிய அனைத்துப் போட்டிகளுமே பிளே ஆஃப் வாய்ப்புகளை நிர்ணயிக்கக் கூடிய போட்டிகளாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணி இரண்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் உள்ளன. எனவே, இப்போட்டியில் வெற்றி என்பது இரண்டு அணிகளுக்குமே அவசியமாக இருந்தது. இது இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருந்தது.

டெல்லி அணி கடந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. அந்த அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல, ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ஹிட் மேயரின் மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் அவரும் விடுப்பில் உள்ளார். அவருக்குப் பதிலாகவும் இந்த அணியில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இப்போட்டியில், ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்திலேயே ஓப்பனர்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாற ஆரம்பித்தனர். அதனால், ஒன் டவுனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். ஆல் ரவுண்டரான அஸ்வின்  இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியாவுக்கு பேட்டிங்கில் கைகொடுத்துள்ளார். அந்தவகையில், ராஜஸ்தான் அணிக்காகவும் சிறப்பான ஆட்டத்தை ஆடி அரைசதம் அடித்தார். அதேபோல, தேவ்தத் படிக்கல்லும் ஆட்டத்தின் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை ஆடினார். அதன்காரணமாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை எடுத்தது. டெல்லி அணி தரப்பில் கி்ட்டத்தட்ட அனைத்து பவுலர்களுமே சிறப்பாகச் செயல்பட்டனர்.

161 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணி கடந்த போட்டியைப்போல ஆரம்பத்திலேயே ஓப்பனர் பரத் டக்அவுட் ஆகினார். இதனால், ஆட்டம் மாறிவிடுமோ என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த முறை செய்த தவறை இந்த முறை செய்யக்கூடாது என்று மிட்செல் மார்ஷும், டேவிட் வார்னரும் நங்கூரம் போட்டு களத்தில் நின்றனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிட்செல் மார்ஷ் 89 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார். அதேபோல, டேவிட் வார்னரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இதன்காரணமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் அணி 3வது இடத்தில் இருந்தது. டெல்லி அணி 5வது இடத்தில் இருந்தது. டெல்லி அணி இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளனர். புள்ளிப் பட்டியலில் தன்னுடைய 5வது இடத்தையும் தக்கவைத்துள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை ஆடியுள்ள 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளனர். இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தால் கிட்டத்தட்ட அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கும். அடுத்துவரும் இரு போட்டிகளில் டெல்லி அணி வெற்றி பெறுவதன் மூலம் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தும்.

அதேநேரத்தில் இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் அணிக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அடுத்து வரும் இரு போட்டிகளில் லக்னோ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளனர். லக்னோ அணி ஏற்கெனவே புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் கடந்த போட்டியில் அந்த அணி குஜராத் அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. எனவே, அந்த அணியும் தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துகொள்ளும் நிலையில் உள்ளது. அதனால், லக்னோ அணியும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்கிற கட்டாய நிலையில் இல்லை. எனவே, அவர்கள் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக ஆடுவார்கள். வெற்றியோடு தொடரை முடிக்க வேண்டும் என்கிற முனைப்போடு செயல்படுவார்கள். அடுத்துவரும் இரு போட்டிகளிலும் பெரிய அணிகளுடன் மோத வேண்டியிருப்பதால் ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்புக்குச் செல்லக்கூடிய அழுத்தம் கூடியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சர்ச்சை பேச்சு: கைதான பாதிரியாருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் அனுமதி

Gayathri Venkatesan

உள்நாட்டு விமான நிலையங்களில், காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை – தமிழ்நாடு நாடார் சங்கம்

Arivazhagan CM

திட்டமிட்டப்படி வரும் 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்

Nandhakumar