விஜய் நடிக்கும் லியோ படக்குழுவுடன் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் லியோ. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் என்று மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. கடந்த மாதமே இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு, 19.10.23ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகும் என்று சொல்லிவிட்டனர்.
இருப்பினும் சமூகவலைதளங்களில் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் நடிகர் மிஷ்கினின் காட்சிகள் முடிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து மிஷ்கின் மற்றும் லோகேஷ் இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டிருந்தனர்.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சஞ்சய் தத் சார் அவரது ஸ்டைலில் படக்குழுவுடன் இணைந்துள்ளார். எக்ஸ்ளூசிவ் வீடியோ வேணும்ணு கேட்டீங்களாமே. எங்களுக்கு கேட்ருச்சு.” என்று கூறி சஞ்சய் தத் படக்குழுவுடன் இணைந்த #BRACEYOURSELF என்ற வாசகத்துடன் வீடியோவை பதிவேற்றியுள்ளனர்.
https://twitter.com/7screenstudio/status/1634495457627099139?t=7SMMjZo-jw2jKXUnUhPcWA&s=08
-ம.பவித்ரா









