ஒரு அழகான நதிக்கரையில் வந்தே பாரத் ரயில் சீறிப்பாய்ந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சுயசார்பு இந்தியா திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் போர் கப்பல்கள், விமானம் தாங்கி போர் கப்பல்கள், போர் விமானங்கள், ரயில்கள் உள்ளிட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, நாட்டில் அதிவேகமாக பயணிக்கும் வந்தே பாரத் ரயில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்திலும், சராசரியாக மணிக்கு 100 கி.மீ. வேகத்திலும் பயணிக்கும்.
What a Capture! #VandeBharat pic.twitter.com/r60CxAPfVm
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) March 9, 2023
இந்நிலையில் வந்தே பாரத் ரயிலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நதிக்கரையில் அருகில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலின் பிம்பம் அருகில் இருக்கும் நதிக்கரையிலும் தெரிவது போன்ற அந்த வீடியோ பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாக உள்ளது.
வந்தே பாரத் ரயிலின் வைரல் வீடியோ பலரின் கவனத் ஈர்த்துள்ள நிலையில், அது மத்திய அமைச்சர்கள், மன்சுக் மாண்டவியா, பியூஸ் கோயல் ஆகியோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பதிவில், என்ன ஒரு அழகான பதிவு என்று வியந்து பாராட்டியுள்ளார்.
அறிவியலின் கண்டுபிடிப்பை அறிவியலின் தத்துவமே மேலும் அழகாக காட்டியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.