ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ்: சானியா மிர்சா அணி தோல்வி

மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – அங்கிதா ரெய்னா இணை தோல்வியடைந்துள்ளது.

டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளானா நேற்று மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வாங்கினார். நேற்று மாலை 4.15 மணிக்கு நடந்த 69 கிலோ குத்துச்சண்டை பிரிவுக்கான முதல் சுற்றுலே விகாஸ் கிரிஷன் தோல்வியடைந்தார். இதைத்தொடர்ந்து நடந்த இந்திய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இன்று நடந்த ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் 3வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தேர்வானார். தொடர்ந்து பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத்தொடர்ந்து மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா அணி உக்ரைன் கிச்நொக் இரட்டையர்களிடம் மோதியது. இந்தப் போட்டியில் சானியா மிர்சா அணி 6-0, 6-7, 8-10 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீனவர்கள் தாக்கப்படுவது இந்தியாவிற்கே அவமானமில்லையா: கொதிக்கும் டிடிவி தினகரன்

Arivazhagan Chinnasamy

உலகின் தலைசிறந்த கொள்கை மனிதநேயம்தான்; திருமாவளவன், எம்.பி

G SaravanaKumar

ஜிப்மர் செவிலியர்கள் வேலைவாய்ப்பில் தமிழகம், புதுச்சேரி புறக்கணிப்பு – வைகோ கண்டனம்

Web Editor