நாட்டில் புதிதாக 39 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39 ஆயிரத்து 742 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 71 ஆயிரத்து 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 535 பேர் சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர். இதன் மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 39 ஆயிரத்து 972 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 51 லட்சத்து 18 ஆயிரத்து 210 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.








