#RatanTata நினைவை போற்றும் விதமாக ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பம்!

மறைந்த ரத்தன் டாடாவின் நினைவை போற்றும் விதமாக ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில்…

மறைந்த ரத்தன் டாடாவின் நினைவை போற்றும் விதமாக ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

அதன்படி இன்று மாலை மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பார்சி முறைப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. இந்நிலையில், ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்த பிரபல சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் ரத்தன் டாடாவுக்கு மணற் சிற்பம் செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.