முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

சாம்சங் ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

ரூ.15,000க்கும் குறைவான விலை கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு இறுதிக்கு பிறகு இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரண போன்களுக்கு நிகராக சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின்றன. தென்கொரிய தயாரிப்பான சாம்சங், இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.15,000க்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
அதன்பிறகு, புதிய போன்கள் அனைத்தையும் ரூ.15,000க்கும் அதிகமாகவே விற்பனை செய்யவுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஸ்மார்ட்போன்களின் உதிரபாகங்கள் விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இதன்காரணமாக ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்த சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சாம்சங் தயாரிப்பு கூட்டாளியான டிக்சன், குறைந்த விலை போன்கள் தயாரிப்பை நிறுத்தவுள்ளது. குறைந்த விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்படுத்த விரும்புபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொல்லியல் துறை மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

Halley Karthik

தினம் கூடுதலாக 2ஜிபி டேட்டா – டவுன்லோட்களுக்கு பஞ்சமில்லா புது ஆஃபர்

Jayapriya

மத்திய அரசை குறைகூறுவது சரியாகாது- ஜி.கே.வாசன்

Ezhilarasan