மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழ்நாட்டிற்கே பொழுதுபோக்கு திமுகவும், முதலமைச்சரும் தான் என சாடினார்.
மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி. அளித்த அவர், மதுரை -தேனி கனவு திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். இதற்காக தென் மாவட்ட மக்கள் சார்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று திமுக ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது என்று சாடிய அவர் கருணாநிதிக்கு பிறகு அவருடைய மகன் வந்து பிரதமரிடம் கச்சத்தீவை மீட்க கேட்கிறார் என குற்றம்சாட்டினார். நீட் தேர்வு குறித்து பிரதமர் கலந்து கொண்ட மேடையில் மு.க.ஸ்டாலின் பேசியது விளம்பரம் தேடுவதற்காகவே என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
கச்சத்தீவு மற்றும் நீட் தேர்வு பிரச்சனைக்கு காரணம் திமுகதான் அவர்களை ஆதரித்தது காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது. பா சிதம்பரத்தின் மனைவி தான் வழக்காடி நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்தவர். மாணவச் செல்வங்களின் படிப்பு தற்போது நீட் தேர்வால் பாதிப்படைந்துள்ளது என்றார்.
திமுக ஒரு வருடத்தில் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது அவர்கள் அறிவித்த திட்டங்கள் பல தோல்வி ஆகி விட்டது என சாடிய செல்லூர் ராஜூ, பிரதமரிடம் மதுரைக்கு மெட்ரோ திட்டம் கொண்டு வருவது குறித்து தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருக்கலாம் என்றும் தமிழ்நாட்டிற்கு பொழுதுபோக்கு திமுகவும், முதலமைச்சரும் தான் என தெரிவித்தார்.