AI தொழில்நுட்பத்துடன் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்…!

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி S24 சீரிஸ் (Samsung Galaxy S24 series) கீழ் 3 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் தனது கேலக்ஸி ஃபோன்களில் அதிகளவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்ஃபோன்…

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி S24 சீரிஸ் (Samsung Galaxy S24 series) கீழ் 3 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் தனது கேலக்ஸி ஃபோன்களில் அதிகளவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பை தொடங்கி உள்ளது. மேலும் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி வகை கைப்பேசிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தவிருவதால், 2024-ம் ஆண்டில், ஸ்மார்ட்ஃபோன்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஆப்பிள் மற்றும் அதன் ஐஃபோனுக்கு மிகப்பெரிய போட்டியாளரான சாம்சங், அதன் முதன்மையான கேலக்ஸி மாடல்களின் அடுத்த தலைமுறை ஃபோன்கள் குறித்து நேற்று (ஜன.17) ஸ்மார்ட்போன்கள் எவ்வாறு உருவாகின்றன என்ற ஒரு விளக்கத்தை வழங்கியிருந்தது.

இதையும் படியுங்கள் : மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் 35 பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்தது காங்கிரஸ்!

சாம்சங்கின் மொபைல் பயன்பாட்டுப் பிரிவின் தலைவர் டிஎம் ரோஹ், கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “தொழில்நுட்ப நிலையை நாங்கள் மாற்றியமைப்போம், உங்கள் திறனை வெளிக்கொணர எந்தத் தடையும் இல்லாமல் புதிய அத்தியாயத்தைத் திறப்போம்” என்று அறிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு சாம்சங் மேற்கொண்ட சொந்த உருவாக்கங்களைத் தவிர்த்து, கேலக்ஸி S24 வரிசையானது கூகுளில் இருந்து வெளிவரும் சில முன்னேறிய தொழில்நுட்பங்களைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.