சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  அந்த…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை 8 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக காலை 7.35 மணியளவில் உற்சவ அம்பாள் கிராம்பு ஏலக்காய் மாலையுடன் கேடயத்தில் புறப்பாடாகி தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.  கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.  விழா நாட்களில் தினமும் மரசிம்ம வாகனம், மர பூத வாகனம், மர அன்ன வாகனம், மர ரிஷப வாகனம், மர யானை வாகனம், மர சேஷ வாகனம், மரக் குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.  திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.16 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.