பீகாரில் தடம் புரண்ட ரயில்: விபத்துக்கு காரணம் என்ன? வெளியான அதிர்ச்சித் தகவல்…

புதுடெல்லியிலிருந்து காமக்யா நோக்கிச் சென்ற நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு டிடியு சந்திப்பு-பாட்னா ரயில் பாதையில் விபத்துக்குள்ளானது.  அந்த விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  பீகாரில் உள்ள…

புதுடெல்லியிலிருந்து காமக்யா நோக்கிச் சென்ற நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு டிடியு சந்திப்பு-பாட்னா ரயில் பாதையில் விபத்துக்குள்ளானது.  அந்த விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ஸ்டேஷன் அருகே ஐந்து பெட்டிகள் தடம் புரண்ட போது ரயிலின் ஒரு பெட்டி கவிழ்ந்தது.  இதில் 4 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, விபத்து நிவாரண வாகனம் மருத்துவக் குழு மற்றும் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. ரயில் விபத்து காரணமாக, PDDU – பாட்னா வழித்தடத்தின் பாதைகள் பாதிக்கப்பட்டன. எல்லா இடங்களிலும் ரயில்கள் நிறுத்தப்பட்டன.

ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக DDU சந்திப்பில் இருந்து புறப்பட்டது.

தனாபூர் மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஆகிய இடங்களில் இருந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். கிராம மக்களின் ஒத்துழைப்புடன் நிவாரணப் பணிகளும், மீட்புப் பணிகளும் நடைபெற்றன. நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் தாமதமாக இரவு 9.45 மணிக்கு DDU சந்திப்பில் இருந்து பாட்னாவிற்கு புறப்பட்டது.

மேலும், புனே டானாபூர் எக்ஸ்பிரஸ், பாபா வைத்தியநாத் எக்ஸ்பிரஸ், அப் சண்டிகர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், பாட்லிபுத்ரா எக்ஸ்பிரஸ், டவுன் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ், டவுன் பாட்லிபுத்ரா எக்ஸ்பிரஸ், பகத் கி கோத்தி காமாக்யா எக்ஸ்பிரஸ், பிகானர் குவஹாத்தி எக்ஸ்பிரஸ், திப்ருகார் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அப், டவுன் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட பல ரயில்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் புறப்பட்டுச் சென்றன.

ரயில்வே நிர்வாகம் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது.
  • பாட்னா – 9771449971
  • டானாபூர் – 8905697493
  • அரா – 8306182542
  • வணிகக் கட்டுப்பாடு – 7759070004

ரயில் தடம் புரண்டதற்கான மூல காரணத்தை கண்டுபிடிப்போம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உயிர் மற்றும் உடைமை இழப்புகளுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், அனைத்து பெட்டிகளும் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். ரயில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய ரயில்வே துறை விசாரணை நடத்தும்.

இதனிடையே, தண்டவாளங்களை சரியாக பராமரிக்காததே ரயில் தடம்புரண்ட விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.