”சிட்டாடல்” தொடரில் சமந்தா நடித்த கதாபாத்திரம் மிகவும் கடினமானது – இயக்குனர் ராஜ் & டிகே!

  சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள “சிட்டாடல்” தொடரின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இயக்குனர் ராஜ் மற்றும் டிகே கடினமான கதாபாத்திரத்தை அவர் நடித்து முடித்ததாக பாராட்டியுள்ளனர். நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய…

 

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள “சிட்டாடல்” தொடரின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இயக்குனர் ராஜ் மற்றும் டிகே கடினமான கதாபாத்திரத்தை அவர் நடித்து முடித்ததாக பாராட்டியுள்ளனர்.

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி இந்தியில் சிறப்பான நாயகியாக மாறியுள்ளார். இவர் ஹிந்தியில் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 தொடரில் நடித்து நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தார். தற்போது சமந்தா பான் இந்தியா நாயகியாக பார்க்கப்படுகிறார்.

நடிகை சமந்தா அண்மையில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனிடையே சிட்டாடல் இந்திய வெர்ஷனில் நடித்துள்ளார் சமந்தா. சிட்டாடல் தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள நிலையில், அதன் பிரீமியரில் சமந்தாவும், கதாநாயகனாக வருண் தவானும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது சிட்டாடல் தொடரின் இந்திய வர்ஷனின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சமூக வலைதளத்தில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் தன்னுடைய கடினமான நேரங்களை சிறப்பாக எதிர்கொள்ள காரணமாக இருந்த படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா. மேலும் இந்த பதிவில் சமந்தாவிற்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே கமண்ட் செய்துள்ளனர். அதில் “நிச்சயமாக நீங்கள் செய்தது கடினமான மற்றும் சவாலான பாத்திரம். உங்களைப் பற்றியும் நீங்கள் செய்த அற்புதமான வேலையைப் பற்றியும் மிகவும் பெருமை.” என பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே தனக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பிற்காக அடுத்த 6 மாத காலங்கள் சமந்தா சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.