வசூலில் கலக்கும் சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’…!

நடிகை சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளது.

நடிகை சமந்தா தயாரித்து நடித்து வெளியாகியுள்ள புதிய திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்’. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநரும், சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமொரு இந்த படத்துக்கு கதை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியானது.

இந்த நிலையில் இத்திரைப்படம் உலகளவில் ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.