முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

சமந்தாவின் புதிய திரைப்படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள ”சாகுந்தலம்” திரைப்படம் ரிலீஸ் தேதியை படக் குழுவினர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, சமந்தாவின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு பிறகு சமந்தா யசோதா, சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, யசோதா திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது சாகுந்தலம் திரைப்பட தேதியை படக்குழுவினர் அறிவித்தனர்.

தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மதுபாலா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளன.


புராண கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் காளிதாசன் எழுதிய சாகுந்தலம் நூலை தழுவி எடுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இந்த படம் நவம்பர் 4 ம் தேதி 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் படத்தின் போஸ்டரை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

-அ.மாரித்தங்கம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அதிமுகவில் எங்களது ஸ்லீப்பர் செல்கள்”- டிடிவி தினகரன் வைத்த சஸ்பென்ஸ்

Web Editor

பசும்பொன் கிராமத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசுடன் மூன்றடுக்கு பாதுகாப்பு.

Halley Karthik

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது!

Gayathri Venkatesan