10 ரூபாய் நாணயங்கள் கொடுத்து கேடிஎம் பைக் வாங்கிய கல்லூரி மாணவர்!

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது கனவு வாகனமான கேடிஎம் வண்டியை 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து கல்லூரி மாணவர் ஒருவர் வாங்கினார். ஈரோடு மாவட்டம், பவானி காடையாம்பட்டி…

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
தனது கனவு வாகனமான கேடிஎம் வண்டியை 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து கல்லூரி மாணவர் ஒருவர் வாங்கினார்.

ஈரோடு மாவட்டம், பவானி காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. அவரது
மகன் சந்தோஷ் குமார். இவர் கோவையில் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேடிஎம் இருசக்கர வாகனம் வாங்க முன் தொகையை செலுத்தி உள்ளார்.

கொரோனா காரணமாக வாகனம் வருவதற்கு கால தாமதம் ஆனதால் முன் தொகையை
திரும்ப பெற்று சென்றுள்ளார். இந்நிலையில் கேடிஎம் வாகனத்தின் புதிய மாடலான கேடிஎம் 360 என்ற ரக வாகனம் தற்போது கிடைப்பதால் அதனை வாங்க முடிவு செய்தார்.


அதே சமயம் 10 ரூபாய் நாணயத்தை பேருந்து மற்றும் கடைகளில் வாங்க மறுப்பதால்
அனைவரும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு ஓரு
விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார்.

இதற்காக 700 கிலோ எடையில் 3 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு 10 ரூபாய்
நாணயங்களை சேகரித்து அதனை இருசக்கர வாகன நிறுவனத்திடம் வழங்கி தனது கனவு
வாகனமான கேடிஎம் புதிய ரக வாகனத்தை வாங்கியுள்ளார்.


இருசக்கர வாகன நிறுவனமும் 10 ரூபாய் நாணயத்தை ஏற்று கொண்டு சந்தோஷ்குமாருக்கு வாகனத்தை வழங்கியது. இரண்டு சக்கர வாகனத்தை வாங்கிய கல்லூரி மாணவன் விழிப்புணர்வு ஏற்படுத்த 10 ரூபாய் நாணயத்தை வழங்கியது ஈரோட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.