“விரைவில் சினிமாவிற்கு திரும்புகிறேன்” – நடிகை சமந்தா பதிவு!

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துவரும் நடிகை சமந்தா விரைவில் நடிக்க வருவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ்…

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துவரும் நடிகை சமந்தா விரைவில் நடிக்க வருவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை திட்டத்தை அறிவித்த திமுக – ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் கூட்டங்கள் நடத்த முடிவு!

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, ஆயுர்வேதா சிகிச்சை எடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.

சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கும் நடிகை சமந்தா! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! - News7 Tamil

யசோதா, சாகுந்தலம் திரைப்படங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதையடுத்து, நடிகை சமந்தா தன்னுடைய உடல் நிலை குறித்து அவ்வப்போது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமந்தா இன்ஸ்டாகிராமில் புதிய விடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “நான் எப்போது மீண்டும் நடிக்க வருவேன் என பலரும் கேட்கிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் வேலையில்லாமல்தான் இருந்தேன். விரைவில் பணிக்குத் திரும்புகிறேன். ஆனால், அதற்கு முன் உடல்நலம் குறித்த பதிவு ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுவேன். பலருக்கும் அது உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.