சகோதரியை கிண்டல் செய்தவரை தட்டி கேட்ட சகோதரர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூரை சேர்ந்த முருகேசனின் மகன் சசிகுமார், கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சரக்கு ஆட்டோ ஒட்டுநரான மலர்மன்னன் தனது நண்பர்கள், ஒருவந்தூரை சேர்ந்த ரஞ்சித், பிரகாஷ், ஆகியோருடன் சேர்ந்து சசிகுமாரை, மோகனுர் ரயில் நிலைய பின்புறம், வரவழைத்து கொடுரமாக கொலை செய்துள்ளனர். புத்தாண்டின் முதல் நாளில் நிகழ்ந்த இந்த கொலைக்கான விதை இரண்டாண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சசிகுமாரின் சகோதரி சந்தியாவை, மலர் மன்னர் குடிபோதையில் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. என் சகோதரியை எப்படி கிண்டல் செய்யலாம் என கூறி சகோதரன் சசிகுமார் மலர்மன்னனை தாக்கி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மலர்மன்னன், சசிகுமாரை பழி தீர்க்க காத்திருந்திருக்கிறார். 2 ஆண்டுகள் வஞ்சம் தீர்க்க காத்திருந்த மலர் மன்னர் இந்த புத்தாண்டின் முதல் நாளில் இந்த வஞ்சத்தை தீர்த்து கொண்டார்.
கொலைச்சசம்பவம் தொடர்பாக, மோகனுர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான, மூன்று பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில், வாங்கல் பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மலர்மன்னன், பிரகாஷ் ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், மோகனூர் – ப.வேலூர் சாலை, வள்ளியம்மன் கோயில் அருகில் பதுங்கி இருந்த ரஞ்சித்தையும், போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.